கீழ் நீதிமன்றகளில் தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் 1994ல் தமிழ், ஆங்கிலத்தில் தீர்ப்பு வழங்கலாம் என உயர்நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்து, கீழமை நீதிமன் றங்களில் தமிழில் மட்டுமே தீர்ப்புகள் எழுத உத்தரவிட வேண்டும் எனக் கோரி வழக்குரைஞர் ரத்தினம் என்பவர் சீராய்வு மனு ஒன்றை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் கீழ் நீதிமன்றங்களில் தமிழில் மட்டுமே தீர்ப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர் வசந்தகுமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதித்துள்ளது.

மேலும் விரிவான விசாரணைக்கு வழக்கு எடுத்து கொள்ளப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.