No split in our group ...OPS press meet
அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியில் பிளவு ஏற்பட்டுள்ளது என்பது உண்மைக்கு புறம்பான செய்தி என்று ஓபிஎஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை திருநெல்வேலிக்கு வந்த முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தபோது ,நாங்கள் தர்மயுத்தம் நடத்துவதே சசிகலா குடும்பத்தை ம் அரசியலை விட்டே வெளியேற்ற வேண்டும் என்பதற்காகத்தான், இதை பலமுறை கூறியும் ஆளும் எடப்பாடி பழனிசாமி அரசு, அதை செய்வதாகத் தெரியவில்லை என குற்றம்சாட்டினார்.
இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதற்காக நாங்கள் பேச்சுவார்த்தையையும் முன்னெடுத்து வருகிறோம். எனவும் ஓபிஎஸ் தெரிவித்தார்.
மேலும் அதிமுக துவங்கிய அக்டோபர் மாதம் நடைபெறும் எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் நுற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்வார். இதற்காக அவரிடம் நேரமும் கேட்கப்பட்டுள்ளது. எங்கள் அணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்பது உண்மைக்கு புறம்பான செய்தியாகும்' என்று தெரிவித்தார்.
