காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனைத்து கட்சி கூட்டம் நடத்த திமுகவுக்கு தகுதி இல்லை என வைகோ காட்டமாக கூறினார்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேற்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி.
3 தொகுதிகளுக்கான இட தேர்தலில், மக்கள் நலக்கூட்டணி போட்டியிட போவதில்லை. எங்கள் கூட்டணியில் உள்ள ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இணைந்து பேசியதில், எடுக்கப்பட்ட முடிவு.
இது நான் மட்டும் எடுத்த முடிவு இல்லை. ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு பின்னர் இது அறிவிக்கப்பட்டதாகும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுடன், எனக்கு எவ்வித கருத்து வேறுபாடுகளும் கிடையாது என்றார்.
பின்னர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, திமுக அனைத்து கட்சி கூட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளதே என கேட்டதற்கு, “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் வகையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட தி.மு.க.வுக்கு தகுதி கிடையாது
