no place for visitors in egmore hospital
சென்னை எழும்பூரில் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றன. அதிநவீன கருவிகளும், உயர் தர சிகிச்சையும் அளிக்கப்படுவதால், பல்வேறு நோய்களால் பாதிக்கப்படும் குழந்தைகள் இங்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆனால், சென்னை குழந்தை நல அரசு தலைமை மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாமல் பெரும்பாலான நோயாளி குழந்தைகளுடன், பெற்றோர்கள் தரையில் படுக்கும் அவலம் உள்ளது.

மேலும், இங்கு உள்நோயாளிகள், வெளிநோயாளிகள் பிரிவுக்கு தினமும் நூற்றுக்கணக்கான உறவினர்கள் வந்து செல்கின்றனர். இரவு நேரத்தில் வரும் நோயாளி குழந்தைகளை காலை 7 மணிக்கு வரும்படி கூறி, அங்குள்ள மருத்துவ ஊழியர்கள் திருப்பி அனுப்புகின்றனர்.
இதனால், வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள், மருத்துவமனை வளாகத்திலேயே இரவு முழுவதும் படுத்து கிடந்துவிட்டு, காலையில், தங்களது குழந்தையை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர்.

தற்போதுள்ள தட்பவெப்பத்தால் நோய் தொற்று அதிகமாக இருக்கிறது. இதனால், வழக்கத்தைவிட கூடுதலான நோயாளிகள் சென்னை குழந்தை நல அரசு தலைமை அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.
ஆனால், போதிய படுக்கை வசதி இல்லாததால் கடுமையான நோயால் அவதிப்பட்டு வரும் பல நோயாளிகள் தரையில் படுக்கும் அவலம் உள்ளது. இதனால் நோயை தீர்க்கவரும் இடத்தில் நோய்தொற்றுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் நோயாளிகளுடன் வரும் குடும்ப நபர்களை இரவு நேரத்தில் திறந்த வெளியில் படுத்து உரங்கும் அவல நிலையும், தற்போழுது மழை காலம் என்பதால் பெறும் சீரமத்துக்கு தள்ளாப்பட்டுள்ளார்கள்.
