டெலிகிராம் செயலியில் நடந்து வரும் நூதன மோசடி.. யாரும் ஏமாற வேண்டாம்.. தமிழக டிஜிபி வார்னிங்

டெலிகிராம் செயலியில் நடைபெற்றும் வரும் நூதன மோசடி குறித்து டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No one should be fooled by the scam going on in Telegram.. Tamilnadu DGP warning

டிஜிபி சைலேந்திர பாபு இதுகுறித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் “ மொபைல் போன் பயன்படுத்துவோருக்கு ஒரு எச்சரிக்கை. லேட்டஸ்டா ஒரு மோசடி வந்துள்ளது. வாட்ஸ் அப்பில் ஏதாவது டெலிகிராம் குரூப்பில் சேர்ந்து முதலீடு செய்தால் நிறைய நன்மைகள் கிடைக்கும் என்று மெசேஜ் வரும். நீங்களும் அப்படி என்ன இருக்கு என்று ஆசைப்பட்டு டெலிகிராம்-ல் சேர்ந்துவிடுவீர்கள்.

அதில் நிறைய பேரின் உரையாடல் இருக்கும். எப்படி என்றால், நான் வருமானம் இல்லாமல் இருந்தேன். விரக்தியில், தற்கொலை செய்து கொள்ளலாம் என்று இருந்தேன். அப்பதான் ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதம் 10,000 கிடைக்கும் என்று சொன்னார்கள். நான் 5 லட்சம் முதலீடு செய்தேன். அது 2 வருடத்தில் 25 லட்சமாகி விட்டது என்று கூறுவார்கள்.

இதையும் படிங்க : மாணவிகளுக்கு இருவிரல் பரிசோதனை நடைபெறவில்லை.! தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம்- அப்போ ஆளுநர் சொன்னது பொய்யா.?

நீங்களும் இதை நம்பி ஒரு லட்சமோ அல்லது 2 லட்சமோ முதலீடு செய்வீர்கள். நீங்கள் முதலீடு செய்த உடனேயே, உங்கள் வங்கிக்கணக்கில் பணம் வந்துவிட்டதாக அத்தாட்சி அனுப்புவாங்க. மாதம் எவ்வளவு வட்டி தொகை வருகிறது என்றும் அந்த அக்கவுண்ட்டில் காட்டி விடுவார்கள்.

இந்த சூழலில் இன்னும் கொஞ்சம் பணம் முதலீடு செய்ய சொல்வார்கள். நீங்களும் முதலீடு செய்வார்கள். 25 லட்சம் ஆனவுடன் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்று கேட்பீர்கள். அவர்கள் 50 லட்சத்தில் தான் கொடுப்போம் என்று சொல்வார்கள். இன்னொரு 25 லட்சம் கட்டி 50 லட்சம் ஆகிவிட்டது என்று சொல்வார்கள். பணத்தை திருப்பி கொடுக்க நீங்கள் கேட்கும் போது உங்களுக்கு பணம் வராது.

உங்களை அந்த டெலிகிராம் குரூப்பில் இருந்து நீக்கி விடுவார்கள். அதன்பின்னர் நீங்கள் எங்கு சென்றாலும் பணம் கிடைக்காது. இது நவீன மோசடி, புதிதாக நடைபெற்று வருகிறது. இந்த டெலிகிராம் மோசடிக்கு தமிழ்நாட்டில் எந்த நபருமே ஆளாகிவிடக்கூடாது. தமிழ்நாட்டில் இப்படி ஒரு மோசடி நடைபெற கூடாது என்ற நல்ல எண்ணத்தில், தமிழக காவல்துறை முன்னெச்சரிக்கையாக முன்னதாகவே உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம். எனவே அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : போடி மக்களுக்கு எதுவும் செய்யாமல் கேரளாவில் ஆயில் மசாஜ் செய்கிறார்.! ஓபிஎஸ்யை விளாசும் தங்க தமிழ் செல்வன்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios