மருத்துவ படிப்பின் நீட் தேர்வு இல்லாமல் சேர்க்கைக்கான மசோதா தமிழக சட்டசபையில் இன்று தாக்கலாகிறது.
கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் நீட் நுழைவு தேர்வை மத்திய அரசு கொண்டு வந்தது. மருத்துவ படிப்பில் அந்தந்த மாநிலங்களில் தேர்வு எழுதி மதிப்பெண் அடிபப்டையில் மாணவர்கள் மருத்துவம் பயின்று வந்தனர்.
இதனால் தாய்மொழியில் கல்வி கற்கும் கிராமப்புற ஏழை மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவம் கற்க முடிந்தது.

இதற்கு வேட்டு வைக்கும் வகையில் சிபிஎஸ்இ உயர்கல்வி போன்றவற்றில் பயின்ற மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பிற்குள் நுழைய கூடிய வகையில் ஒரு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
நீட் தேர்வு என்று அழைக்கபடும் இந்த தேர்வை எழுதினால்தான் மருத்துவ படிப்பில் சேரமுடியும் என்ற சட்டம்தான் அது.
இதை தமிழகத்தில் உள்ள கல்வியாளர்கள் சமூக ஆர்வலர்கள் அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்த்தனர்.
கிராமப்புறங்களில் இருந்து வரும் திறமை வாய்ந்த மாணவர்களை ஒதுக்கி வைக்கும் ஏற்பாடு இது.

மருத்துவ கல்வி பயில அவர்கள் பள்ளியில் எடுத்த அதிகபட்ச மதிப்பெண்களும் மாநில அளவில் எழுதும் தேர்வுகளுமே போதுமானது.
நீட் நுழைவு தேர்வினால் வசதி படைத்தவர்களும், பெரிய கல்வி நிறுவனங்களில் பயின்றவர்கள் மட்டுமே இதி வெற்றி பெற முடியும் என்பதால் இதை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா நீட் தேர்வை கடுமையாக எதிர்த்தார்.
அவர் மறைவுக்கு பின்னர் தமிழக அரசும் நீட் தேர்வை ஏற்று கொள்ளவில்லை.

தமிழக மாணவர்களின் நலனை கருதி நீட் தேர்வு இல்லாத மருத்துவ படிப்புக்கான மசோதாவை தமிழக அரசு கொண்டு வருகிறது.
இதற்கான சட்ட முன்வடிவை சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.
