No licenced building will demolished quickly....Udumalai radha krishnan
சென்னை சில்க்ஸ் கட்டடம் 4 தளங்கள் கட்ட மட்டுமே அனுமதி பெற்றுவிட்டு 8 தளங்கள் கட்டியுள்ளதாகவும், உயர்நிதிமன்றத்தில் தடை பெற்றுள்ளதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை என அமைச்சர் தெரிவித்தார்.
தியாகராயநகர் சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் அக்கடை முற்றிலும் எரிந்து சாம்பலானது. தீ இன்னும் அணைக்கப்படாத நிலையில் இது குறித்து அமைச்சர் உடுமலை ராதாகிருண்ஷனன் செய்தியாளர்களிடம் பேசினார்.
கடந்த 2000 ஆம் ஆண்டு சென்னை சில்க்ஸ் 4 தளங்கள் கட்ட மட்டுமே சிஎம்டிஏ விடம் அனுமதி பெற்றது. ஆனால் அந்த நிறுவனம் விதிகளை மீறி 8 தளங்களை கட்டியுள்ளது.

இது குறித்த நடவடிக்கை எடுக்க முயன்றபோது அவர்கள் உயர்நீதிமன்றத்தை நாடி தடையாணை பெற்றுவிட்டனர். இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் போனதாக அமைச்சர் கூறினார்.
தற்போது வரை அந்த கட்டடத்துக்கான பணி நிறைவு சான்றிதழை அவர்கள் தரவில்லை என உடுமலை ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.

தற்போது எந்தவித பாரபட்சமும் இன்றி விதிமுறைகளை மீறிகட்டிய கட்டடங்கள் இடித்துத் தள்ளப்படும் என தெரிவித்தார்.
இது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருவதாகவும், அவர்கள் தரும் ஆய்வறிக்கையின் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
