கடும் வறட்சியிலும் மக்களுக்கு போதுமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஒ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆட தொடங்கியுள்ளது. சென்னையின் பல்வேறு இடங்களில் மே மாத ஆரம்பத்திலேயே உப்பு நீரை வடிகட்டி குடிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பத்து நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பல இடங்களில் காலிகுடங்களுடன் பெண்கள் சாலையில் நிற்பதைத்தான் பெரும்பாலும் பார்க்க முடிகிறது.

இந்நிலையில், அமைச்சர் ஒ.எஸ் மணியன் கடும் வறட்சியிலும் மக்களுக்கு போதுமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த ஒ.எஸ் மணியன் கூறியதாவது:

குடிநீர் பற்றாக்குறையை போக்க தமிழக அரசு போர்கால நடவடிக்கையை எடுத்து வருகிறது.

கடும் வறட்சியிலும் மக்களுக்கு போதுமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நிலத்தடி உப்பு நீரை சுத்திகரிக்க செய்து வாளங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.