Asianet News TamilAsianet News Tamil

“வதந்தியை நம்பாதீங்க...” புயலுக்கான வாய்ப்பு இல்லை - வானிலை மையம் தகவல்

no chance-for-storm
Author
First Published Dec 20, 2016, 1:17 PM IST


வங்க கடலில், இலங்கை அருகே குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. தற்போது புயல் அபாயம் ஏதும் இல்லை. எனவே, வதந்திகளை நம்ப வேண்டாம்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஸ்டெல்லா, கூறுகையில், வங்க கடலில், தென்மேற்கு பகுதியில் இலங்கை அருகே குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.

இதனால், அடுத்த, 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர பகுதிகளிலும், உள்மாவட்டங்களில் சில பகுதிகளிலும் லேசான மற்றும் மிதமான மழை பெய்யும். தமிழகத்திற்கு தற்போது புயல் அபாயம் இல்லை.

எனவே, அது குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம். கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, தலைஞாயிறு பகுதியில், 4 செ.மீ., வேதாரண்யத்தில், 2 செ.மீ., பாபநாசத்தில், 1 செ.மீ., மழை பெய்துள்ளது என்றார். 

Follow Us:
Download App:
  • android
  • ios