தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் பகுதியில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு  பகுதியால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது என நேற்று சென்னை  வானிலை  ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில், குறைந்த காற்றழுத்த பகுதியானது மியான்மர் நோக்கி நகர தொடங்கியதால் தமிழகத்தில்   மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றும், இதன் காரணமாக அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு பின் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இத காரணமாக குறைந்த காற்றழுத்த பகுதியால், தமிழகத்தில் மழை வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை வானிலை மையம் வெளியிட்ட தகவலால், மழை வரும் என எதிர்பார்த்து  காத்துக்கொண்டிருந்த தமிழக மக்களுக்கு ஏமாற்றமே மிச்சம்.