பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரேங்க் முறையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு இன்று மாலை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

2016-2017-க்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 2ல் தொடங்கி 31 ஆம் தேதி முடிவடைந்தது. தமிழகம் முழுவதும் சுமார் 9 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

இதன் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

பனிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவுகளில் ரேங்க் முறை பின்பற்றப்பட்டு வந்தது.

மேலும், மாநில அளவில் அதிக மதிப்பெண் பெறும் முதல் 3 மாணவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டு வந்தது.

இந்நிலையில், பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரேங்க் முறையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு இன்று மாலை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

இதில், சி.பி எஸ்.இ முறை போல் மாநில அரசு கடைபிடிக்க வாய்ப்பு உள்ளது.

பொதுத்தேர்வு முடிவுகளில் இனி ரேங்க் முறையில் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படாது.

மாநில அளவில் அதிக மதிப்பெண் பெறும் முதல் 3 மாணவர்களின் பெயர்கள் வெளியிடப்படாது.