எதிரிகளை வீழ்த்த சிறப்பு பூஜையில் நித்தி.!....சீடர்களுடன் புது வியூகம்.! 

நித்யானந்தா மீது தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்திலிருந்து வழக்கு ரீதியாக  தொடர் நெருக்கடியை சந்தித்து வரும் நித்யானந்தா தற்போது புது வியூகத்தில் இறங்கி உள்ளார்

மதுரை ஆதீன மடத்தின் 293-வது மடாதிபதியாக நித்யானந்தா தனக்குத்தானே அறிவித்துக்கொண்டதை எதிர்த்தும், அவர் ஆதீன மடத்துக்குள் நுழைய தடை விதிக்கக் கோரியும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜெகதலபிரதாபன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், மதுரை ஆதீன மடத்துக்குள் நுழைய நித்யானந்தாவுக்கு தடை விதித்தது. 

இது குறித்து பதில் மனு தாக்கல் செய்த நித்யானந்தா,

மதுரை ஆதீன மடத்தின் 293-வது மடாதிபதியாக நான் அறிவித்துக்கொண்டதை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன். இதற்காக மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்’’ என குறிப்பிட்டு இருந்தார்.

எதிரிகளை வீழ்த்த...

தொடர்ந்து பல வழக்குகளில் நெருக்கடியை சந்தித்து வரும் நித்யானந்தா,எதிரிகளை வீழ்த்த ஒரு புது முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.அதாவது, திருசெந்தூர் சுப்ரமணிய சாமி கோவிலுக்கு சென்று வழிபட்டார்.

சத்ரு சம்ஹாரா பூஜை

தன்னுடைய சீடர்கள் புடைச்சூழ,விஐபி அந்தஸ்துடன்,பூரண கும்ப மரியாதை கொடுக்கப்பட்டு நித்யானந்தாவை வரவேற்கப்பட்டது

பின்னர் பெருத்த வரவேற்புடன் சாமியை தரிசனம் செய்த நித்யானந்தா,எதிரிகளை   வீழ்த்தி,அதாவது எதிரிகளின் சக்தி பலம் இழக்க செய்யும் வகையில் சிறப்பு "சத்ரு சம்ஹாரா பூஜையில்" ஈடுபட்டார்

பின்னர் அங்கிருந்து கடற்கரைக்கு சென்று  சூரியனை பார்த்து வழிபாடு செய்தார் நித்யானந்தா.