இந்து மதத்தை இழிவுப்படுத்த எவனுக்கும் உரிமையில்லை என்று சாமியார் நித்தியானந்த தெரித்துள்ளார்.
இந்து மதத்தை இழிவுப்படுத்த எவனுக்கும் உரிமையில்லை என்று சாமியார் நித்தியானந்த தெரித்துள்ளார். சர்ச்சை சாமியாரான நித்தியானந்தா அவ்வப்போது சில வீடியோக்களை வெளியிட்டு சர்சைககளை கிளப்பி வருகிறார். இவர் ஒரு தீவில் அவரது சீடர்களுடன் தலைமறைவாக உள்ளார். அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடியும் இதுவரை அவர் எங்கு இருக்கிறார் என்பது கண்டறியப்படவில்லை. அவ்வப்போது வீடியோக்களை மட்டும் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பும் அவர், தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். யுடியூபில் ஒருவர் சிதம்பரம் நடராஜரை இழிவுப்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.

அதற்கு கண்டனம் தெரிவித்த நித்தியானந்த அவரை சரமாரியாக திட்டியதோடு வாலை சுருட்டிக்கொண்டு வேலைபார்க்க வேண்டும் என்றும் இந்து மதத்தை இழிவுப்படுத்த எவனுக்கும் உரிமையில்லை என்றும் தெரித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசுகையில், பகுத்தறிவு பன்னாடைகளா என்று கடும் சொற்களால் பேச்சை தொடங்கினார்.
மேலும் பகுத்தறிவு என்ற பெயரில் இந்து மதத்தை இழிவுப்படுத்தி பேசுபவர்களை பணத்திற்காக எதையும் சாப்பிடும் பன்றிகள் என்று உவமைப்படுத்தினார். சட்ட ஒழுங்கை சீர்குழைப்பதற்காக மக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதையே வேலையாக கொண்டிருக்கும் சமூக விரோதிகள், சட்ட விரோதிகள், இந்து விரோதிகள் தங்கள் வாலை சுருட்டிக்கொண்டு வாழ்க்கையை பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
