தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பா.ஜ.க. வளர்ந்து வருவதை யாராலும் மறுக்க முடியாது. இங்குள்ள இளைஞர்கள் தங்கள் கனவுகளை நனவாக்கும் திறன் பா.ஜ.வுக்கு இருப்பதாக நம்புகின்றனர்: என்று வீடியோ கான்பரன்ஸிங்கில் மோடி பெருமிதம். (நெட்டுக்குத்தா வளருதா இல்ல குறுக்கால வளருதா, எப்டிக்கா வளருது நமோஜி? தமிழக இளைஞர்கள் உங்க மேலே நம்பிக்கை மட்டுமா வெச்சிருக்காங்க, அதையும் தாண்டி என்னெல்லாமோ வெச்சிருக்காங்க. அப்டியோ கொஞ்சம் மீம்ஸ் பக்கம் வந்து பாருங்க புரியும்.)

* ராகுலை பிரதமராக முன்மொழிந்ததற்காக கடும் கண்டனத்தை கூட்டணிக்குள்ளே சம்பாதித்திருக்கிறார் ஸ்டாலின். ராகுல்தான் பிரதமராக வேண்டுமா? யார் வேண்டுமானாலும் ஆகலாம்! என அகிலேஷ் கொதிப்பு: செய்தி. (பாவம் அந்த பச்சப்புள்ள பப்பு. அதுபாட்டுக்கு மொபைல்ல தலீவர் சிலைய போட்டோ எடுத்துக்கினு ஒக்காந்திருந்தது.  தள்பதி வீணா ஒரு இஸ்டேட்மெண்ட தட்டிவுட்டு பப்பு பெயரை கப் அடிக்க வெச்சுட்டாரே மினிம்மா!?)

* ஸ்டாலின் ராசி, தேசிய அளவில் வேலை செய்யுது. ஆபரேஷன் சக்ஸஸ். ஆனா பேஷன்ட் ராகுல் நிலை என்னவோ?: என்று அ.தி.மு.க.வின் வைகை செல்வன் கிண்டல். (க்கும், நம்ம கட்சி நிலமை அதலபாதாளத்துல குப்புறக்கா கெடக்குறப்ப அடுத்தவன பார்த்து நக்கல் எதுக்கு? சொந்த தம்பியவே கட்சியை விட்டு நீக்க வேண்டிய நிலையில துணை முதல்வர் இருக்கிறப்ப எப்பவோ வரப்போற பிரதமர் பதவி பத்தி நீங்க ஏன் பாஸ் கமெண்ட் அடிக்கிறீங்க?)

* விஷால் தலைவராக இருக்கும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு போட்டனர் எதிர்ப்பாளர்கள்: செய்தி. (அண்ணே அப்படியே விஷால் நடிச்ச படம் ஓடுற தியேட்டர்களுக்கு இப்டியொரு பூட்ட போட்டீங்கன்னா உங்களை கெத்தா நினைப்போம்! ம்ம்ம்முடியலைண்ணே அவரோட பஞ்ச் டயலாக்கும், பழைய மாவு கதைகளும்.)

* கணவர் என்னை சிறையில் வந்து பார்க்காதது வருத்தம் தருகிறது. என் குடும்பத்தினரிடம் மனம் விட்டு பேசி, உண்மைகளை சொல்ல நினைக்கிறேன். பத்திரிக்கைகள் எழுதித்தான் அவர்கள் சிறையில் வந்து என்னை சந்திக்க செய்யவேண்டும்: பேராசிரியை நிர்மலாதேவி விருப்பம். (எதுக்கு கை வலிக்க எழுதிக்கிட்டு, நீங்க போன் போட்டு  ‘அதாவது கண்ணுகளா...’ன்னு பத்து நிமிஷம் உரையாத்துங்க. அப்படியே அதை ரெக்கார்டு பண்ணி வாட்ஸ் அப்ல வைரலாக்கிடுவோம். அதுக்கப்புறமும் வரமலா போயிடுவாங்க?)