அடுத்த வீட்டு பெண்களை நாசப்படுத்த நினைத்த பேராசிரியை நிர்மலாதேவி, ரகசிய பேனா கேமரா வைத்திருந்ததாக, சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

பேராசிரியை நிர்மலாதேவி மீதான வழக்கு விசாரணை, விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மேலும், நிர்மலாதேவியின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 28 ஆம் தேதி அன்று வரவிருக்கிறது. நிர்மலாதேவி வழக்கில் 200 பக்கங்கள் கொண்ட 2-வது மற்றும் இறுதி குற்றப்பத்திரிகை சிபிசிஐடி டி.எஸ்.பி. கருப்பையா தலைமையிலான போலீசார், இம்மாதம் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், நிர்மலாதேவியிடம் எடுக்கப்பட்ட குரல் மாதிரி சோதனை அறிக்கைகள், செல்போன் உரையாடல்கள் உள்ளிட்ட விசாரணை ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பேராசிரியை நிர்மலா ரகசிய பேனா கேமரா வைத்திருந்ததாக சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.