Asianet News TamilAsianet News Tamil

நிர்மலா தேவி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்! 

Nirmala Devi case was transferred to CBCID
Nirmala Devi case was transferred to CBCID
Author
First Published Apr 17, 2018, 3:31 PM IST


மாணவிகளை தவறாக நடத்திய பேராசிரியை நிர்மலா தேவி வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் செயல்பட்டு வரும் தேவாங்க கல்லூரியில் பேராசிரியையாக இருக்கும் நிர்மலா தேவி. கடந்த சில தினங்களாக ஆடியோ பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. அந்த ஆடியோவில், மாணவிகளிடம் பேசிய பேராசிரியை, மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் சில அதிகாரிகள் உள்ளனா். அவர்களின் விருப்பத்திற்கு நீங்கள் சம்மதம் தெரிவித்தால் உங்களை அவா்கள் அடுத்த லெவலுக்கு அழைத்துச் செல்வார்கள். அதுமட்டுமல்லாமல் மாதா மாதம் உங்கள் வங்கி கணக்குகளில் பணம் செலுத்தப்படும் என்று பேசி மாணவிகளை பெரிமநிதர்களின் படுக்கைக்கு அனுப்ப புரோக்கராக மாறியிருந்த விஷயம் கேட்பவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Nirmala Devi case was transferred to CBCID

இதனையடுத்து கல்லூரி நிர்வாகம் நிர்மலா தேவியை அதிரடியாக இடைநீக்கம் செய்தது. இதையடுத்து மாணவிகளுக்கு தவறான பாதையை போதித்த நிர்மலா தேவியை கைது செய்ய வேண்டும் என்று முன்பு கல்லூரி முன்பு திரண்ட மாதர் சங்கத்தினர், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நிர்மலா தேவியை கைது செய்ய வேண்டும். பின்னர் கல்லூரி நிர்வாகம் கொடுத்த புகாரின்பேரில் போலீஸார் நிர்மலா தேவி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். 

Nirmala Devi case was transferred to CBCID

அவரிடம் விசாரணை நடத்துவதற்காக ஏடிஎஸ்பி மதி தலைமையிலான போலீஸார் அவரது வீட்டுக்கு சென்றனர்.ஆனால் அவரது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து போலீஸார் அங்கேயே 2 மணி நேரம் காத்திருந்து திரும்பி விட்டனர். இதையடுத்து அக்கம்பக்கத்தில் விசாரணை நடத்தியதில் நிர்மலா தேவி வீட்டுக்குள் இருப்பதாக தகவல் கிடைத்ததால்,

Nirmala Devi case was transferred to CBCID

அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் வந்தவுடன் கதவை உடைத்து நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டனர். 7 மணி நேரங்களுக்கு பிறகு கணவர் சரவண பாண்டி, சகோதரர் மாரியப்பன் உள்ளிட்டோர் கதவை திறந்து சரணடைந்து விடுமாறு செல்போன் மூலம் நிர்மலாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் அவர் அதை கேட்கவில்லை. 

Nirmala Devi case was transferred to CBCID

பல மணி நேரத்திற்குப் பிறகு நிர்மலா தேவியின் கணவர் மற்றும் சகோதரர் முன்னிலையில் வீட்டின் பூட்டை உடைத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரை திருச்சுழி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்ற போலீசார் இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்று பேராசிரியை விடிய விடிய விசாரணை நடத்தினர். தொடர்ந்து இன்றும் நடந்து வரும் விசாரணையில், பேராசிரியை நிர்மலா தேவியிடமிருந்து  மூன்று செல்போன்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். நிர்மலா தேவியிடம் இருந்து 3 செல்போன்கள் மற்றும் மெமரி கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவரது செல்போனில் ஏராளமான தொலைபேசி எண்கள் இருப்பது தெரியவந்தது. மேலும், நிர்மலா தேவி யார் யாரிடம் பேசியுள்ளார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி
வருகின்றனர். செல்போனில் உள்ள புகைப்படங்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையின்போது பல திடுக்கிடும் தகவல்கள் வந்துள்ள நிலையில், நிர்மலா தேவி வழக்கை, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். நிர்மலா தேவி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகே சிபிசிஐடி விசாரணை தொடங்க உள்ளதாக தெரிகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios