உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்க கூறி மாணவிகளை வற்புருத்திய பேராசிரியை நிர்மலா தேவியை நேற்று போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்நிலையில் இவரை 12 நாட்கள் சிறையில் அடைக்கக்கூறி விருதுநகர் குற்றவியல் நீதி மன்ற நடுவர் மும்தாஜ் உத்தரவிட்டுள்ளார். 

அருப்புக்கோட்டை பேராசிரியை:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக்கல்லூரியில் கணித பேராசிரியையாக பணிபுரிந்து வருபவர் நிர்மலா தேவி. 

மாணவிகளிடம் செல் போன் உரையாடல்:

இந்நிலையில் நிர்மலா தேவி 4 மாணவிகளிடம், சுமார் 19 நிமிடம்... அவர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயல்வது போல் பேசியுள்ள ஆடியோ ஒன்று வெளியானது. இதுகுறித்து மாணவிகள் கொடுத்த புகாரின் பேரின் இவர் 15 நாட்கள் அந்த கல்லூரியில் இருந்து பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்.

கைது செய்ய கோரிக்கை:

மாணவிகளின் வாழ்கையை கேள்விகுறியாகும் வகையில் அவர்களை தவறான பாதைக்கு நிர்மலா தேவி கொண்டு செல்வதாக கூறி பல்வேறு தரப்பினரும் இவரை கைது செய்ய வேண்டும் என போர்க்கொடி தூக்க ஆரம்பித்தனர். மேலும் இதில் சம்பந்தப்பட்ட மாணவிகளும் இவர் மீது புகார் போலீசில் கொடுத்து நடவடிக்கை எடுக்க கூறினார்.

சிறையில் அடைப்பு:

நிர்மலா தேவியை கைது செய்த போலீசார் விருதுநகர் குற்றவியல் நீதி மன்ற நடுவர் மும்தாஜ் முன்பு ஆஜர் படுத்தினர். நீதிபதி இவரை 12 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.