மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட உதவி பேராசிரியை நிர்மலா தேவி முன் ஜாமீன் கோரி ஆறாவது முறையாக மனு தாக்கல் செய்துள்ளார்.

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலாதேவி, கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார் கேட்டுக் கொண்டதன் பேரில், நிர்மலா தேவியை குரல் ஒப்பீட்டுப் பரிசோதனைக்காக சென்னை அழைத்துச் செல்ல சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி 6 ஆவது முறையாக ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிர்மலா தேவி இன்று  மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது. ஏற்கனவே இவரது முன் ஜாமீன் மனு 5 முறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் ஆறாவது முறையாக முன் ஜாமீன் கோரியுள்ளார்.

இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய உதவிப்பேராசிரியர் முருகன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை வரும் 29ஆம் தேதி விசாரிப்பதாகக் கூறி நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது. மாணவிகளை பெரும் புள்ளிகளின் படுக்கைக்கு அனுப்ப புரோக்கராக மாறிய பேராசிரியை நிர்மலா தேவி கஜினி முகமது மாதிரி தொடர்ந்து, ஜாமீன் மனு போட்டுக்கொண்டே இருக்க, அதற்க்கு நீதிபதிகள் விஜயகாந்த் ஸ்டைலில் தூக்கி அடிப்பது என தொடர்ந்து அரங்கேறிக்கொண்டே இருக்கிறது.

இந்த நிர்மலா தேவி மீது பாலியல் குற்றத்துக்கு தூண்டுதல், குற்றம் செய்ய முயற்சி, தகவல் தொழில் நுட்பத்தைத் தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.