Nirmala Devi affair Professor Karuppasamy saran
உதவி பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் தேடப்பட்டு வந்த முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, மதுரை 5-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் சரணடைந்துள்ளார். இவரிடம் நடத்தப்படும் விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளி வரலாம் என்று கூறப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலா தேவி, 4 மாணவிகளை தவறான வழிக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் சிபிசிஐடி போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்தியதில், தன்னை செல்போனில் பேச தூண்டியதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிடிரயர்கள் முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர்களது பெயர்களை கூறினார்.
இதனை அடுத்து, அவர்கள் இருவரும் தலைமறைவான நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், நிர்மலா தேவி கூறியிருந்த தகவலுக்கு முகாட்நதிரம் இருப்பது தெரியவந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். பாலியல குற்றத்துக்கு தூண்டுதல், குற்றம் செய்ய முயற்சி, தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதால் ஆகிய பிரிவுகளின்கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தலைமறைவாக இருந்த மற்றொரு பேராசிரியர் கருப்பசாமியை தேடி வந்த நிலையில், நேற்று நள்ளிரவில் கருப்பசாமி சிக்கியதாக தகவல் வெளியானது. கருப்பசாமி, சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து வரப்படாத நிலையில் அந்த தகவலை உறுதி செய்ய முடியாத நிலை இருந்து வந்தது. இந்த நிலையில், கருப்பசாமி, மதுரை 5-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் அவர் சரணடைந்துள்ளார்.
இதையடுத்து கருப்பசாமிக்கு வரும் 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. மதுரை 5-வது நீதிதிதுறை நடுவர் மன்றம் விதித்துள்ளது. கருப்பசாமி சரணடைந்துள்ளதை அடுத்து, அவரிடம் நடத்தப்படும் விசாரணையில் இந்த விவகாரத்தில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள முருகன், ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
