அந்தமான் நிக்கோபார் தீவுகள் அருகே நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு.
விசாகப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 1,260 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது.
இதனால் தமிழகத்தின் தெற்கு கடலோர பகுதிகளிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதையொட்டி 48 மணி நேரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
