newsanchors arrested and settled them in samoothaaya koodam
பெண் பத்திரிகையாளர் குறித்தும் தமிழ் மீடியாக்களில் பணிபுரியும் பெரும்பாலான செய்தியாளர்கள் என குறிப்பிட்டு மிகவும் இழிவாக எஸ்.வி.சேகர் பதிவிட்டதை தொடர்ந்து,அவருக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
பெண் பத்திரிகையாளர்கள் உட்பட ஒட்டுமொத்த தமிழ் பத்திரிகையாளர்களையும் இழிவுப்படுத்தும் விதமாக மூன்றாம் தர வார்த்தைகளை பயன்படுத்தி மிகவும் மோசமாக எஸ்.வி.சேகர் பதிவிட்டுள்ளார்.
எஸ்.வி.சேகருக்கு பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தனது முகநூல் பதிவு தொடர்பாக விளக்கம் அளித்தும் பெண் பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கோரி எஸ்.வி.சேகர் அறிக்கை விடுத்துள்ளார்.
இருந்தாலும்,அறிக்கையில் கடைசி லைனில்,பதிவை நீக்கிவிட்ட பின்பும் ஸ்நாப்சாட் எடுத்து பகிரபட்டு வருவதற்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன் என எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் கூறி உள்ளார் சேகர்

எஸ்வி சேகரின் இழிவான பதிவால், கொந்தளிக்கும் செய்தி வாசிப்பாளர்கள் மற்றும் ஊடகவியலார்கள் எஸ்வி சேகர் மீது பல காவல் நிலையங்களில் புகார் அளித்து வருகின்றனர்.
மேலும், செய்தி வாசிப்பாளர்கள் 50 கும் மேற்பட்டோர் ஒன்று கூடி, சேகர் வீட்டின் முன்பு ஆர்பாட்டம் நடத்தினர்.
"வெளியே வா எஸ்வி சேகர்" என பல முழக்கங்களை எழுப்பியும், வீட்டின் கதவை தட்டியும் எஸ்வி சேகர் வெளியில் வரவில்லை.
பின்னர் அங்கு குவிந்த காவலர்கள் போரட்டத்தில் ஈடுபட்ட செய்திவாசிப்பாளர்களான பிரபுதாஸன், தாட்சாயினி, நாசர் அலி, பூர்ணிமா, ஜீவசகாப்தன், பாலவேல், ஹசிப் முகமது ஆகியோர் கைது செய்யப்பட்டு மீனவர் சமூக நல கூடங்களில் அடைத்து வைத்து உள்ளனர்.
இதுவரை கைது செய்யப்பட்டவர்களை வெளியில் விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
