சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வாகனத்தில் அதிகவேகமாக சென்று விபத்து ஏற்பட்டதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 

புத்தாண்டை உற்சாகமாகக் கொண்டாட்டத்தின் போது இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் அதிக ஒலி எழுப்பியவாறு அதிவேகத்தில் சென்றனர். இதை தடுக்கும் நோக்கில் சென்னையில் முக்கிய இடங்களில் தடுப்புகளை அமைத்து தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், கண்காணிப்பு கேமரா மூலமும் கண்காணிக்கப்பட்டது. அப்படி இருந்த போதும் உற்சாகத்தில் உச்சயில் சென்ற ஏராளமான இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றனர். இதில் சறுக்கி கீழே விழுந்து 7 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதனைத் தொடர்ந்து விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சென்று அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.