new way to destroy the mosquito
சுகாதார நிலையங்களில் கம்பூஷியா மீன் வளர்ப்பு-டெங்கு கொசு ஒழிக்க ஏற்பாடு
தமிழகத்தில் டெங்கு, மலேரியா காய்ச்சலை பரப்பும் கொசுக்களை உண்ணும் 'கம்பூஷியா' மீன்களை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வளர்த்து வினியோகிக்க திட்டமிட்டுள்ளனர்.
தமிழகத்தில் 'டெங்கு' காய்ச்சலால் பலர் தொடர்ந்து பலியாகி வருகின்றனர். தற்போது மழை விட்டு, விட்டு பெய்வதால், நீர் தேங்கும் இடங்களில் டெங்குவை பரப்பும்.ஏ.டி.எஸ். கொசு உட்பட பல வகை கொசுக்கள் வளர்ந்து காய்ச்சலை ஏற்படுத்துகிறது.
இந்த கொசுக்களின் முட்டை, லார்வா புழுக்களை உணவாக உண்ணும் கம்பூஷியா மீன்களை நீர் நிலைகளில் விட திட்டமிடப்பட்டுள்ளது.இந்த மீன்களை வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டி, குடிநீர் தொட்டிகளிலும் விடலாம்.
இதற்காக அனைத்tது.அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கம்பூஷியா மீன்களை தொட்டியில் வளர்க்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த மீன்களை வளர்த்து, வீட்டில் வளர்க்க விரும்பவர்களுக்கு இலவசமாக வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளனர்.சுகாதாரத்துறை இயக்குனர் ஜெகவீரபாண்டியன் கூறியதாவது;
பொதுமக்கள் மழை நேரத்தில் தண்ணீரை சுட வைத்துக் குடிக்க வேண்டும்.
சுற்றுப்புறங்களில் மழை நீர் தேங்காமல், உரல், டயர்களை அப்புறப்படுத்த வேண்டும்.வைரஸ் காய்ச்சல்தான் அதிகமாக உள்ளது.டெங்கு, மலேரியா காய்ச்சலை பரப்பும் கொசுக்களை, உண்பவை கம்பூஷியா மீன்கள்.இம்மீன்களை ஆரம்ப சுகாதார நிலையங்களில் வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பொதுமக்களுக்கு வழங்கவும்,
நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்
