சென்னையில் புதிய வாக்காளர் அடையாள அட்டையை எப்போது பெறலாம் என்று தேர்தல் அலுவலர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் புதிதாக சேர்ந்த 18வயது பூர்த்தியான  வாக்காளர்கள் எண்ணிக்கை 38,131 ஆகும். இதுவரை வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படாத 19 வயதிற்கு மேற்பட்டோர்களுக்கான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை உடனடியாக வழங்கப்படும். 

18 மற்றும் 19-வயது பூர்த்தியடைந்த இறுதி திருத்தப் பட்டியலில் பெயர்கள் சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள், தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25 அன்று சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் வழங்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.