வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசாஅருகே வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால், தமிழக்கத்தில் 6 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் சின்னம் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கிழக்கு மத்திய வங்கக்கடலில் ஆந்திராவில் வடக்குப்பகுதியிலும், தெற்கு ஒடிசா கடற்கரைப்பகுதியிலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது தற்போது  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது. இது மேலும் வலுப்பெற்று புயலாக மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வட தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இரவு ேநரத்தில் மழை பெய்து வருகிறது.

இதன்காரணமாக, தமிழகக் கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது, கடல் கொந்தளிப்பாகவும் சீரற்ற வானிலையும் காணப்படுகிறது. இதையடுத்து, ம் சென்னை, கடலூர், நாகை, பாம்பன், காரைக்கால் மற்றும் புதுச்சேரி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்தம் காரணமாக, தெற்கு மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. எனவே அந்தமான், தெற்கு வங்கக்கடல், ஆந்திரா மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில், ஆந்திராவின் வடக்குப்பகுதி, ஒடிசா மாநிலத்தின் தெற்கு கடற்கரைப்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக மழை இருக்கும், ஆனால், தமிழகத்துக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு இல்லை. இந்த குறைந்தகாற்றுழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, தமிழகத்துக்கு அடுத்த இன்றும், நாளையும் நேரடியாக மழை பெய்ய வாய்ப்பு உண்டு எனத் தெரிவித்துள்ளார்.