Asianet News TamilAsianet News Tamil

உஷார் மக்களே...! 2 நாட்களில் சென்னையை நெருங்கும் ஆபத்து

வங்க கடலில் அடுத்த 48 மணிநேரத்தில் புயல் உருவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட இடங்களில் 2 நாட்களுக்கு பிறகு கனமழை வெளுத்து வாங்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. 

New Storm...heavy rain Alert
Author
Chennai, First Published Nov 10, 2018, 5:17 PM IST

வங்க கடலில் அடுத்த 48 மணிநேரத்தில் புயல் உருவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட இடங்களில் 2 நாட்களுக்கு பிறகு கனமழை வெளுத்து வாங்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. New Storm...heavy rain Alert

இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில்; அந்தமான் கடற்பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது தென் கிழக்கு வங்ககடல் மற்றும் வடக்கு அந்தமான் பகுதியில் மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து 48 மணி நேரத்தில் புயலாக உருவாக வாய்ப்புள்ளது. அந்த புயல் 14-ம் தேதி இரவு வட தமிழகம், தெற்கு ஆந்திரா பகுதியை நெருங்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. New Storm...heavy rain Alert

இதன் காரணமாக அந்தமான் நிகோபர் தீவுகளில் மிக கனமழை பெய்து வருகிறது. அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் மணிக்கு 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. எனவே மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனே கரைக்கு திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 New Storm...heavy rain Alert

இதன் காரணமாக தென் தமிழக பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குன்னூரில் 3 செ.மீ., மழை பெய்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios