Asianet News TamilAsianet News Tamil

அரசு அலுவலகங்களில் முதல்வரின் படம் அச்சிடுவதில் குழப்பம்

new cm-photo
Author
First Published Dec 15, 2016, 12:22 PM IST


அரசு அலுவலகங்களில் முதல்வரின் படம் அச்சிடுவதில் குழப்பம்

முதலமைச்சா்  ஓ. பன்னீர்செல்வத்தின் அதிகாரப்பூர்வ படம் வெளியாகாததால், அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு சார்ந்த விழா அழைப்பிதழ்களில் குறிப்பிட தமிழக அதிகாரிகள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது.

முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல்நலக் குறைவால் டிசம்பா்  5ம் தேதி காலமானார். இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பு ஏற்றார். வழக்கமாக அலுவலகங்கள் மற்றும் அரசு விழாக்களில், முதல்வர் படம் இடம் பெறும். ஓ.பன்னீர்செல்வத்தின் அதிகாரப்பூர்வ படம் இதுவரை வெளியாகவில்லை. சென்னை உட்பட மாநிலத்தில் எந்த பகுதியில் அரசு விழாக்கள் நடந்தாலும், முதல்வராக இருந்த ஜெயலலிதா படம் மட்டுமே இடம் பெறும். தற்போது முதல்வராக பொறுப்பு ஏற்ற பன்னீர்செல்வம், தன் படம் இடம் பெறுவதை தவிர்த்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் அவரது அதிகாரப்பூர்வ படம் வெளியாகவில்லை.

அரசு விழாக்களுக்காக அழைப்பிதழ்கள் அச்சடிக்கும் போது, எந்த முதல்வர் படத்தை வெளியிடுவது என்பதில் அதிகாரிகளுக்குள் குழப்பம் நிலவுகிறது. இதுகுறித்து அந்தந்த மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களை தொடர்பு கொண்டாலும் கூட, அவர்களுக்கும் தெளிவான உத்தரவு இல்லாததாக தெரிவிக்கின்றனர்.

முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவையொட்டி கடைபிடிக்கப்பட்ட துக்கம் டிசம்பா் 12ம் தேதியுடன் தான் முடிந்தது. இனிமேல் தான் முதல்வரின் அதிகாரப்பூர்வ படம் வெளியிடப்படும்  என தொிகிறது.

Attachments area

Follow Us:
Download App:
  • android
  • ios