புதிய தலைமை செயலகம் கட்டியதில் முறைகேடு என கூறப்படும் புகாரை இனி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. புதிய தலைமை செயலக கட்டட முறைகேடு புகாரை விசரித்து வந்த நீதிபதி ரகுபதி கமிஷன் அண்மையில் கலைக்கப்பட்டது.

 

தலைமை செயலகம் கட்டுமானம் தொடர்பாக நடைபெற்ற முறைகேடு புகார் குறித்து இனி புதிதாக எந்தவித கமிஷனும் அமைக்கப்பட மாட்டாது என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் உறுதி அளித்துள்ளார். மேலும், ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி கமிஷன் மூலம் திரட்டப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும், லஞ்ச ஒழிப்பு துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2006 - 11 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமை செயலகம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்த தலைமை செயலகம் கட்டப்பட்டபோது முறைகேடுகள் நடந்ததாக கூறி, ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி கமிஷன் அண்மையில் கலைக்கப்பட்டது.

 

இந்த நிலையில், புதிய தலைமை செயலக கட்டட முறைகேடு புகாரை விசாரித்து வந்த நீதிபதி ரகுபதி கமிஷன் அண்மையில் உயர்நீதிமன்றத்தால் கலைக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அனைத்து ஆதாரங்களையும், தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், இது தொடர்பாக அவர்களே இந்த வழக்கை விசாரிப்பார்கள் என்றும், அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். இந்த நிலையில் நாளை விரிவாக உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்து நாளை தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.