new born baby cried during funeral
இறந்ததாக கருதப்பட்ட பெண் குழந்தை நல்லடக்கம் செய்த போது திடீரென அழுததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
திண்டுக்கல் மாவட்டம் மரியநாதபுரத்தை சேர்ந்தவர்கள் குழந்தைராஜ் -மரியவினிதா தம்பதி.மரிய வினிதா பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இதனை தொடர்ந்து இன்று காலை 8மணிக்கு பெண்குழந்தை பிறந்துள்ளது.ஆனால் பிறக்கும் போதே இந்த குழந்தை இறந்தே பிறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இறந்ததாக கருதப்பட்ட குழந்தையின் உடலை மருத்துவர்கள் உறவினரிடம் ஒப்படைத்தனர்.இதனை அடுத்து நல்லடக்கம் செய்ய சென்ற போது அந்த குழந்தை திடீரென அழ தொடங்கியது
குழந்தை அழுததால் அதிர்ச்சியான உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மருத்துவரின் அலட்சியத்தால் தான் இந்த சம்பவம் நிகழ்ந்தது என போர்க்கொடி தூக்கி உள்ளனர் ஊர் மக்கள்
