விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் யானை தந்தத்தால் ஆன அணிகலன் மற்றும் சுடுமண்ணால் ஆன தொங்கட்டான் கண்டறியப்பட்டுள்ளது 

கடந்த மார்ச் 16 ஆம் தேதி முதல் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே வைப்பாற்றின் வடகரையில் அமைந்துள்ள உச்சிமேட்டில் 25 ஏக்கர் பரப்பளவிலான தொல்லியல் மேட்டில் அகழ் ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்விற்கு முன்னதாக அந்த பகுதியில், சுட்டுமண்ணால்‌ ஆன பகடைக்காய்‌, தக்களி, ஆட்டக்காய்கள்‌, முத்து மணிகள்‌, சங்கு வளையல்கள்‌, சுடு மண்ணால்‌ செய்யப்பட்ட விளையாட்டுப்‌ பொருள்கள்‌, அழகியவேலைப்பாடுகளுடன்‌ கூடிய சுடு மண்‌ அகல்விளக்கு ஆகியவை கண்டறியப்பட்டன.

மேலும் படிக்க: TNPSC : டிஎன்பிஎஸ்சி தேர்வில் மைனஸ் மார்க் இருக்கு.. மாணவர்கள் ஷாக்.! வெளியான அதிர்ச்சி தகவல் !

இதனை தொடர்ந்து அங்கு அகழ்வாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டதில், இன்று அழகிய வேலைப்பாடுகளுடன்‌ கூடிய யானை தந்தால்‌ செய்யப்பட்ட அணிகலன்‌ மற்றும்‌ சுடுமண்ணால்‌ ஆன தொங்கட்டான்‌ ஆகிய அணிகலன்கள்‌ கண்டறியப்பட்டுள்ளன. யானை தந்ததால்‌ செய்யப்பட்ட அணிகலன்‌ 5 சென்டிமீட்டர்‌ நீளமும்‌, 0.8 சென்டிமீட்டர்‌ விட்டமும்‌, 61 கிராம்‌ எடை கொண்டதாக உள்ளது. 

அதேபோல்‌ சுடுமண்‌ தொங்கட்டான்‌ 2.2 சென்டிமீட்டர்‌ நீளமும்‌, 1.01 சுற்றளவும்‌ 65 கிராம்‌ எடையும்‌ கொண்டதாக உள்ளது. தற்பொழுது கண்டறியப்பட்ட இரு அணிகலன்கள்‌ மூலம்‌ தொன்மையான மனிதர்கள்‌ சுடுமண்‌ பொருள்களை பல்வேறு வகையில்‌ பயன்படுத்தி உள்ளதும்‌ பெண்கள்‌ அணிகலங்களை அழகிய வடிவில்‌ பயன்படுத்தி உள்ளதும்‌ தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க: Tamilnadu Rain :இன்று தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை..தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு.!