Asianet News TamilAsianet News Tamil

வந்தே பாரத்.. உற்சாக வரவேற்பளித்த மதுரை மக்கள் - தமிழக அமைச்சருக்கு கேக் ஊட்டி மகிழ்ந்த தெலுங்கானா ஆளுநர்!

பிரதமர் நரேந்திர மோடி நெல்லையில் இருந்து சென்னை வரை செல்லக்கூடிய வந்தே பாரத் ரயிலை இன்று காணொளி வாயிலாக துவக்கி வைத்தார். இன்று மதியம் சென்னை செல்வதற்காக நெல்லையில் துவக்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை, மத்திய இணை அமைச்சர் ஆகியோர் பயணித்தனர்.

Nellai Chennai Vande Bharath Train Special Cake cutting function held at madurai railway station ans
Author
First Published Sep 24, 2023, 6:12 PM IST

இந்த நிலையில் வந்தே பாரத் ரயில் மதுரை ரயில் நிலையம் வந்தடைந்தது. இதனை அடுத்து பாஜக சார்பில் மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பு வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மதுரை மேயர் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். 

இந்த நிகழ்ச்சிக்காக பிரத்யோகமாக செய்யப்பட்ட வந்தே பாரத் ரயில் போன்று அமைக்கப்பட்ட கேக் வெட்டப்பட்டது. தொடர்ந்து தமிழிசை சௌந்தர்ராஜன் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சொன்னதை செய்த ஸ்டாலின்: கோவை சாலைகளில் ஆய்வு!

இதனை தொடர்ந்து மதுரையில் தமிழிசை செளந்திர ராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்;  அப்போது "இரண்டு ரயில்கள் சென்னையில் இருந்தும், ஒரு ரயில் தென்பகுதிக்கும் விடப்பட்டுள்ளது. தமிழகத்தை புறக்கணிக்கிறார்கள். தமிழக மக்கள் மீது அக்கறை இல்லை என்பதை நம்ப வேண்டாம். பிரதமருக்கு தமிழகத்தின் மீது அன்பு கொண்டுள்ளார் என்பதை நம்ப வேண்டும்".

"வந்தே பாரத் ரயிலில் பயணம் மேற்கொண்ட அனுபவம் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, குழந்தைகள் ஆர்வமுடன் தங்களது பயணக் குறிப்புகளை என்னிடம் உற்சாகமாக பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. சாதாரண குடிமகளாக தமிழகத்தின் மகளாக வந்தே பாரத் ரயிலில் மக்களோடு மக்களாக வந்தேன். வந்தே பாரத் ரயிலில் பயணித்த மக்களின் மகிழ்ச்சியை பாரத பிரதமரிடம் சமர்பிக்க உள்ளேன்" என்று தமிழிசை கூறினார்.

தொடங்கியது நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் சேவை: பொதுமக்கள் உற்சாகம்!

Follow Us:
Download App:
  • android
  • ios