Asianet News TamilAsianet News Tamil

வதந்திகளை நம்ப வேண்டாம்... நெல் ஜெயராமன் கவலைக்கிடம்!

இயற்கை வேளாண் விஞ்ஞானி எனப்போற்றப்படும் நெல் ஜெயராமன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமணியில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் உயிரிழந்ததாக தகவல் பரவியது. ஆனால் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Nel Jayaraman Serious condition
Author
Chennai, First Published Dec 5, 2018, 5:56 PM IST

இயற்கை வேளாண் விஞ்ஞானி எனப்போற்றப்படும் நெல் ஜெயராமன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமணியில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் உயிரிழந்ததாக தகவல் பரவியது. ஆனால் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

  Nel Jayaraman Serious condition

நம் முன்னோர்கள் காலத்தில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் வகைகள் புழக்கத்தில் இருந்ததாம். அவைகளை பிரித்தறிய கூட முடியாத நிலையிலும், கண் முன்னே பல நெல் வகைகள் அழிவதை கண்ட ஜெயராமன், தமிழகம் முழுவதும் கடந்த 15 ஆண்டுகளாக பயணம் செய்து, 169 அபூர்வ நெல் வகைகளை மீட்டெடுத்த ஜெயராமன் கடந்த சில மாதங்களாகவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த கட்டிமேடு கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஜெயராமன். 9 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். திருத்துறைப்பூண்டியில் தொழிலாளியாக வேலை செய்த இவர், கடந்த 2003 இல் பூம்புகார் முதல் கல்லணை வரை ஒரு மாத காலம் நம்மாழ்வார் நடத்திய விழிப்புணர்வு நடைப்பயணத்தில் ஜெயராமன் பங்கேற்றார். அப்போது நம்மாழ்வாரிடம் விவசாயிகள் நெல் விதைககளை கொடுத்தனர். இதனை ஜெயராமனிடம் கொடுத்துள்ளார் நம்மாழ்வார். அன்று முதலே பாரம்பரிய நெல் விதிகளை தேடி தேடி, இதுவரை 169 வகையான பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்துள்ளார். Nel Jayaraman Serious condition

அதுமட்டுமல்லாமல், ஆதிரெங்கத்தில் ஆண்டுதோறும் மே கடைசி வாரத்தில் பாரம்பரிய நெல் திருவிழாவை ஜெயராமன் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் நடத்தி வந்தார். இந்த விழாவில் என்ன சுவாரஸ்யம் என்றால், இந்த விழாவில் கலந்துக்கொள்ள வரும் ஒவ்வொரு விவசாயிடம் 2 கிலோ பாரம்பரிய நெல் விதை இலவசமாக வழங்கப்படும் அதை அவர்கள் தங்கள் வயல்களில் விளைவித்து, அவரவர் பகுதிகளில் அவற்றை பரவச்செய்ய வேண்டும். மீண்டும் அடுத்த ஆண்டு நெல் திருவிழாவுக்கு வரும்போது 4 கிலோ விதையை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்பதே...Nel Jayaraman Serious condition.

ஜெயராமனின் பணிகளை அங்கீகரிக்கும் வகையில், தேசிய அடிப்படை நிலை கண்டுபிடிப்பு - பாரம்பரிய அறிவுக்கான விருதையும், SRISTI அமைப்பின் இளம் காந்தியத் தொழில்நுட்பக் கண்டறிதலுக்கான SRISTI சம்மான் விருதையும் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் வழங்கி கவுரவித்துள்ளது. நெல்லுக்காக பாடுபட்டு விவசாயத்தை அலைந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக இத்தனை ஆண்டு காலம் போராடிய இவர், கடந்த சில மாதங்களாக புற்றுநோயாள பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். Nel Jayaraman Serious condition

இந்நிலையில் அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. ஆனால் நெல் ஜெயராமன் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என ஜெயராமன் சகோதரரின் மகன் ராஜு கூறியுள்ளார். அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் நெல் ஜெயராமன் தொடந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார். இதையடுத்து ஜெயராமனுக்கு நிதி உதவி வழங்கிய அரசுக்கு ராஜு நன்றி தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios