நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் தமிழக அரசின் ஓராண்டு அவசர சட்டத்திற்கு மத்திய அரசின் சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ள சிலையில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று கையெழுத்திட்டதும் அமலுக்கு வரும் என எதிர்பாக்கப்படுகிறது.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு ஓராண்டு விலக்கு பெற வழிவகை செய்யும் அவசர சட்ட முன்வரைவை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு சார்பில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து நீட் தேர்வில் விலக்கு அளிக்கலாம் என மத்திய அரசின் தலைமை வக்கீல் கே.கே.வேணுகோபால் கருத்து கூறியிருந்தார்.

 இதை ஏற்று, இந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு மத்திய அரசு விலக்கு அளிக்க மத்திய சட்ட அமைச்சகம், சுகாதாரத்துறை அமைச்சகம், மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இன்று உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன் தமிழக கவர்னர் கவர்னர் ஒப்புதல் அளித்த உடன் சட்டம் அமலுக்கு வரும். இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து அருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான அமைத்து நடைமுறைகளும் உடனடியாக தொடங்கவுள்ளது.

ஏற்கனவே மருத்து கல்வித்துறை சார்பில் தர வரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.