நீட் தேர்வு விவகாரத்தில் இந்த வாரத்திற்குள் இறுதி முடிவு தெரியும்…தமிழக அரசு நம்பிக்கை….

நீட்  தேர்வு விவகாரத்தில் இந்த வாரத்துக்குள் இறுதி முடிவு தெரிந்துவிடும் என்றும் நிச்சயமாக தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் என நம்புவதாக  தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,மருத்துவ கல்வி சேர்க்கையில் தமிழக மாணவர்களுக்கான 85 சதவீத இடஒதுக்கீட்டை பொறுத்தவரை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து, நம்பர் ஆவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக தெரிவித்தார்.

நீட் தேர்வு விலக்குக்கான அவசர சட்டத்தை பொறுத்தவரை சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும்,  இந்த வாரத்துக்குள் இறுதி முடிவு இப்படியா? அல்லது அப்படியா? என்பது தெரிந்துவிடும் என தெரிவித்தார்.

மாநில அரசின் இடங்களுக்குத்தான் நாம் விலக்கு கேட்கிறோம். நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் இடங்களுக்கோ, தனியார் கல்லூரி இடங்களுக்கோ அல்ல. தமிழ்நாட்டில் மட்டுமே பொது நுழைவுத்தேர்வு இல்லாமல் இருந்தது. பிற மாநிலங்களில் ஏதோ ஒரு நுழைவுத்தேர்வு மருத்துவ படிப்புக்கு இருந்தது என்றும்  அதனால் தான் தமிழ்நாட்டுக்கு விலக்கு கேட்பதாகவும் தெரிவித்தார்.