neet exam result come soon after june 13 by cbsc
நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 13 க்கு பிறகு வெளியிடப்படும் எனுவும் நீதிமன்ற தடையால் இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை எனவும் சிபிஎஸ்இ தகவல் தெரிவித்துள்ளது.
மருத்துவ படிப்பு படிக்க மாணவ மாணவியர்கள் நீட் தேர்வு என்ற புதிய தேர்வை எழுத வேண்டும் என மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. ஆனால் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நீட் தேர்வின் போது பல்வேறு விதிமுறைகள் கடைபிடிக்கபட்டன. மேலும் பலத்த பரிசோதனைக்கு பிறகே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாகவும், அனைத்து மாநிலங்களிலும் ஒரே வினாத்தாளை கொண்டு தேர்வுமுறை நடத்தப்படவில்லை எனவும் மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பல்வேறு வழக்குகளை தொடுத்து வருகின்றனர்.
மேலும் தற்போது நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு புதிய வினாத்தாளை கொண்டு நீட் தேர்வு நடத்த வேண்டும் என்று ஒரு சிலரும், வேறு சிலர் தமிழகத்தில் நீட் தீர்வே இருக்ககூடாது எனவும் தெரிவித்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.
இதனால் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட 4 வாரம் தடை விதித்து மே 24 ல் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 13 க்கு பிறகு வெளியிடப்படும் எனுவும் நீதிமன்ற தடையால் இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை எனவும் சிபிஎஸ்இ தகவல் தெரிவித்துள்ளது.
