திருவாரூர்

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் திருவாரூரில் 50-க்கும் மேற்பட்டோர் வாயில் கருப்புத் துணிக் கட்டி போராட்டம் நடத்தினர்.

தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு தரப்பினர், மக்கள் என தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, இந்திய மாணவர் பெருமன்றத்தினர் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் திருவாரூர் பேருந்து நிலையம் அருகில் திரண்டனர். அவர்கள் அனைவரும் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பதாகைகளை கையில் ஏந்தி நின்றனர்.

மேளும், இந்தப் போராட்டத்தின்போது, “நீட் தேர்வு கொண்டுவந்ததால் கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மருத்துவ இலட்சியம் கனவாக மாறியுள்ளது. எனவே, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது.