சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போட்டி; கமல்ஹாசன் விருப்பம்
ஜல்லிக்கட்டு மீதான தடையை எதிர்த்து சென்னை மெரினாவில் நடத்தப்பட்ட போராட்டத்தை நினைவுகூறும் வகையில், மெரினாவில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஒற்றுமை இந்தியா என்ற பெயரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள நடைபயணத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டார். மேலும் அவருடன் அக்கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் ஒற்றுமை இந்தியா பயணத்தில் கலந்து கொண்டவர்களை கௌரவிக்கும் விதமாக கட்சி அலுவலகத்தில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.
தமிழ்நாடு வரலாறு பற்றி ஆர்எஸ்எஸ் பிரசாரக்காரருக்கு என்ன தெரியும்? ஆளுநருக்கு வைகோ கடும் கண்டனம்
இந்த நிகழ்ச்சியில், நடைபயணம் மேற்கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. கிராமிய இசை நிகழ்ச்சிகளுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்வில், கமல்ஹாசன் பேசியதாவது, மத்தியில் ஆளும் பாஜக அரசு மதவாத அரசியலை செய்து கொண்டிருக்கிறது. இந்து மதத்தை வைத்து அரசியல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும். நாட்டில் மக்களை ஒன்றிணைக்கும் வகையில் மக்களை ஒற்றுமைப்படுத்தும் வகையில் ராகுலின் நடைப்பயணம் உள்ளது என்றார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்கிறார் உதயநிதி - அமைச்சர் மூர்த்தி
மேலும், சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தபோது அதற்கு எதிராக மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தி, அதில் வெற்றி பெற்றதை நினைவுகூறும் வகையில் மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். இதற்காக அனுமதியும் கோரப்பட்டுள்ளது. விரைவில் அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.