மின் இணைப்பில் உள்ள பெயரை மாற்ற வேண்டுமா? சிறப்பு முகாம் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் தேவை?
ஜூலை 24 முதல் அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் நுகர்வோர் இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு முகாம் தொடங்கி உள்ளது.

பொதுமக்களின் நலன் கருதி, பெயர் மாற்றத்தில் உள்ள இடையூறுகளைத் துடைக்க, கட்டணம் செலுத்திய உடனேயே பெயர் மாற்றம் செய்ய ஜூலை 24 முதல் அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 24 முதல் 1 மாதம் இந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதன் மூலம் கட்டணம் செலுத்திய அன்றே மின் இணைப்பில் உள்ள பெயரை மாற்றிக் கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் உள்ள வீட்டு மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய தற்போது, தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்தின் இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்து, நிர்ணயிக்கப்பட்ட மின் கட்டணத்தை செலுத்தி பெயர் மாற்றம் செய்து கொள்ளும் வசதி தற்ஓது நடைமுறையில் உள்ளது. எனினும் மின் இணைப்புகளில் உள்ள பெயரை மாற்றம் செய்யும் போது, பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை தவிர்க்க இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து மற்ற அனைத்து வேலை நாட்களிலும் இந்த சிறப்பு முகாம் காலை 9 மணி முதல் 5 மணி வரை நடைபெறுகிறது.
என்னென்ன ஆவணங்கள் தேவை?
ஆதார் அட்டை
நகராட்சி, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சமீபத்திய சொத்து வரி
நகராட்சி அல்லது மாநகராட்சி தவிர மற்ற பகுதிகளில் விற்பனை பத்திரத்தின் நகல் அவசியம்
இறப்பின் காரணமாக பெயர் மாற்றம் செய்யும் விண்ணப்பாதார்களுக்கு தேவையான ஆவணங்கள்
சொத்துப் பத்திரம் அல்லது செட்டில்மெண்ட் பத்திரம்
ஆதார் அட்டை
கராட்சி, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சமீபத்திய சொத்து வரி
நகராட்சி அல்லது மாநகராட்சி தவிர மற்ற பகுதிகளில் விற்பனை பத்திரத்தின் நகல் அவசியம்
இதனிடையே தமிழகம் முழுவதும் விரைவில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்ட பிறகு, 2 மாதத்திற்கு ஒருமுறை செய்யப்படும் மின் கட்டண முறை கைவிடப்படும். மாதம் மாதம் மின் கட்டணம் கணக்கிடப்படும். அதே போல் ரூ.1000, ரூ.2000-க்கு மேல் மின் கட்டணம் வந்தால் ஆன்லைன் மூலம் மட்டும் மின்கட்டணம் செலுத்தும் முறையை கொண்டு வர தமிழ்நாடு மின்சார வாரியம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அண்ணாமலை நடைபயண தொடக்க விழாவில் இபிஎஸ்- ஓபிஎஸ் கலந்துகொள்வார்களா.? எதிர்பார்த்து காத்திருக்கும் பாஜக