வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே, மாமனார் தனது மருமகனை கொன்று புதைத்த விவகாரம் எட்டு மாதங்களுக்கு பின் அம்பலமாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரசமங்கலம் அருகே ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் சுந்தரேசன்.

இவரது இரண்டு மனைவிகள் இறந்துவிட்ட நிலையில் ஏற்கனவே கணவனை இழந்த காசியம்மாள் என்ற பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்தார்.

காசியம்மாளின் முதல் கணவருக்கு பிறந்த குப்பு என்ற பெண்ணுக்கு  சிங்காரெட்டியூரை சேர்ந்த பழனி என்பவரை திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்நிலையில், நாள்தோறும் குடித்துவிட்டு வீட்டுக்கு செல்லும் பழனி, மனைவி குப்புவை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

இதைதொடர்ந்து தனது மனைவி காசியம்மாளுடன் பழனி கள்ளத் தொடர்பில் இருப்பதாக சுந்தரேசனுக்கு சந்தேகம் இருந்துள்ளது.

இதையடுத்து சுந்தரேசன் பழனியை மன்வெட்டியால் அடித்து கொலை செய்து புதைத்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் எட்டு மாதங்களுக்கு பின் தற்போது தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலீசார் புதைத்த இடத்திலிருந்து பழனியின் உடலை பிரேத பரிசோதனை செய்து உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.