Asianet News TamilAsianet News Tamil

தேசிய கொடியை எரித்தவர் கைது! கும்பகோணத்தில் பரபரப்பு...

National flag burner arrest kumbakonam
National flag burner arrest kumbakonam
Author
First Published Apr 1, 2018, 12:39 PM IST


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததைக் கண்டித்து தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் தேசிய கொடியை எரித்த சம்பவம் கும்பகோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த கெடு, கடந்த 29 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. உச்சநீதிமன்றம் விதித்த 6 வார கால அவகாசம் வரையில் அமைதி காத்துவிட்டு, ஸ்கீம் என்பதற்கு விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றத்தை
மத்திய அரசு நாடியுள்ளது.

இந்த நிலையில், காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய திமுக சார்பில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாக மு.க.ஸ்டாலின் கூறினார். வரும் 5 ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும், அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் செய்தியாளர்கள் சந்திப்பின்போது மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு தரப்பிரனர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கும்பகோணத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர், காவிரி வாரியம் அமைக்கப்படாததை கண்டித்து தேசிய கொடியை எரித்துள்ளார்.

கும்பகோணம் சுவாமிமலையைச் சேர்ந்தவர் பிரபுபதி. இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இட்நத நிலையில் அவர் இன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததைக் கண்டித்து கோஷம் எழுப்பியனார். பின்னர் திடீரென, தேசிய கொடியை எரித்தார். தேசிய கொடி எரிக்கப்பட்டதை வீடியோ எடுத்து அதை சமூகவலைத்தளங்களில் பரவி விட்டார். தேசிய கொடியை எரிப்பதை பார்த்த சிலர் காவல் துறைக்கு புகார் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் பிரபுபதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios