NEET PG 2023: முதுநிலை நீட் தேர்வு - தமிழகம் முழுவதும் 25 ஆயிரம் பேர் எழுதினர்

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை சுமார் 25 ஆயிரம் பேர் இன்று எழுதியுள்ளனர்.

National Board of Examinations held NEET PG 2023 today

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் பிஜி (NEET PG) நுழைவுத் தேர்வை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் ஆண்டுதோறும் நடைபெறும் நடத்தி வருகிறது.

இந்த ஆண்டுக்கான முதுநிலை நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. இதற்காக 271 நகரங்களில் 600 க்கு மேற்பட்ட தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தமிழகத்தில் மட்டும் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் உள்ளிட்ட நகரங்களில் இத்தேர்வு நடந்தது.

MK Stalin: மக்கள் அரசைத் தேடி வந்த காலம் மாறிவிட்டது - முதல்வர் ஸ்டாலின் உரை

தமிழகத்தில் சுமார் 25 ஆயிரம் பேரும் நாடு முழுவதும் 1.60 லட்சம் பேரும் இத்தேர்வுக்கு விண்ணப்பித்தனர். காலை 9 மணி முதல் பகல் 12.30 மணி வரை இணைய வழியில் இந்தத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வு முடிவுகள் மார்ச் 31ஆம் தேதி வெளியாக உள்ளது.

அரசு மருத்துவ கல்லூரிகளில் இருந்து 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. மீதி உள்ள இடங்களுக்கும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் மாநில அரசு கலந்தாய்வு நடத்துகிறது. தமிழகத்தில் மட்டும் அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் 1050 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது.

Keezhadi Museum: கீழடி அருங்காட்சியகத்தை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் மு. க. ஸ்டாலின்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios