natham young man burned

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே இளைஞர் ஒருவரின் உடல் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல்லை அடுத்த நத்தம் பகுதி மலைகளால் சூழ்ந்த நகரம். இந்நிலையில் நத்தத்தை அடுத்த மணக்காட்டூர் - ஆலம்பட்டி மலைப் பகுதியில் இன்று மாலை 30 வயது மதிக்கத்தக்க வாலிபரின் பிணம் ஒன்று தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

இந்த சம்பவத்தை காட்டுப்பகுதி வழியாக பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து போலீசாருக்கு அவர்கள் தகவல் அளித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற நத்தம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்தவர் யார் ? அவர் கொலை செய்யப்பட்டாரா ? அல்லது தன் மீது பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.