Natarajan hospitalized

புதிய பார்வை ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான ம. நடராஜன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை, தாம்பரத்தை அடுத்துள்ள மேடவாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் ம. நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஈரல் அறுவை சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அறுவை சிகிச்சைக்காக லண்டனில் இருந்து மருத்துவர் வர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடராஜன், தனது மனைவி சசிகலாவை பார்க்க விரும்புவதாக கூறியுள்ளதாக தெரிகிறது.