சென்னை மாவட்ட அமர்வு நீதிபதியாக நசீமா பானு நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வழக்கறிஞர்கள், நீதிபதிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நசீர் அகமது, நாளை ஓய்வு பெறுகிறார்.

இதையடுத்து, அந்த பதவிக்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிபதியாக பணியாற்றி வந்த நசீமா பானு நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனால், மதுரை மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் பாலராஜமாணிக்கம், பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவண்ணமாலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி தன்ராஜும் பதவி ஓய்வு பெறுவதால், அந்த பதவிக்கு திருநெல்வேலி குடும்ப நல நீதிபதி மகிழேந்தி நியமிக்கப்படுகிறார்.

இந்த தகவல், சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் சக்திவேல் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.