நீட் தேர்வுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர் நளினி சிதம்பரம் வீட்டை முற்றுகையிட முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்காததால் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

அவர் உயிரிழப்புக்கு நீதி கேட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் மாணவர்கள், கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என போராட்டம் நடத்தி வருகின்றனர்.

உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வில் தமழகத்துக்கு விலக்கு அளிக்கு அவசர சட்டத்துக்கு எதிராக வழக்கறிஞர் நளினி சிதம்பரம் வாதாடினார். சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு ஆதரவாக அவர் வாதிட்டார்.

இந்த நிலையில், மருத்துவ படிப்புக் இடம் கிடைக்காததால் மாணவி அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அனிதா உயிரிழப்பு எதிர்ப்பு தெரிவித்து, வழக்கறிஞர் நளினி சிதம்பரம் வீட்டை, மாணவர்கள் மற்றும் சில அமைப்பினர் முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.