Mysterious death bank staff with cellphone in hand Police investigation ...

கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் இரவு கடைக்கு சென்ற வங்கி காவலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். எப்படி இறந்தார்? என்று போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே சத்தியநகர் பகுதியைச் சேர்ந்தவர் எட்வின் அருமைராஜ் (53). இவர் அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கு செல்வ சுஜாதா (48) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். 

மனைவி செல்வ சுஜாதா திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பனியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், எட்வின் அருமைராஜ் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. 

இதனால், அவரது மனைவி செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது செல்போன் எடுத்துவிட்டு பேசவில்லை. இதனையடுத்து அவரை பல இடங்களில் தேடினர். ஆனால், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. 

இந்த நிலையில், நேற்று காலையில் வீட்டின் அருகே உள்ள வயலில் எட்வின் அருமைராஜ் மர்மமான முறையில் செத்துக் கிடந்தார். அவரது வாயில் இருந்து இரத்தம் வடிந்த நிலையில் காணப்பட்டது. 

அவரது ஒரு கையில் செல்போன் இருந்தது. அவர் சென்ற மோட்டார் சைக்கிள் சற்று தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 

இதுகுறித்து அஞ்சுகிராமம் காவலாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ் குமார் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து காவலாளர்கள் வழக்குப்பதிந்து எட்வின் அருமைராஜ் எப்படி இறந்தார்? என்று விசாரித்து வருகின்றனர்.