இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மயிலாப்பூரில் 114 அடி, 78 அடி மற்றும் 55 அடி ஆழத்தில் என்று 3 அடுக்குகளில் மெட்ரோ ரயில் நிலையம் அமையவுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் புவியியல்‌ நிலை முதல்‌ சாலையின்‌ அகலம்‌ குறைவு வரை பல்வேறு பிரச்னைகள்‌ இருப்பதால்‌, மயிலாப்பூர்‌ மெட்ரோ ரயில்‌ நிலையம்‌ அமைப்பது மிகவும்‌ சவாலாக இருக்கிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டாம் கட்ட மெட்ரோ இரயில் திட்டப்பணிகள் ரூ. 61,843 கோடி மதிப்பில் 118.9 கீ.மி தூரத்திற்கு நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தில் கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி வரை 26.1 கி.மீ தொலைவுக்கும் மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ தொலைவுக்கும் மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீ தொலைவுக்கும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டப்பணி நடைபெறுகிறது.

இந்நிலையில் இரண்டாம் கட்ட திட்டத்தில் மயிலாப்பூரில் மூன்று நடைமேடைகளுடன் ஆழமான மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுக்குறித்து பேசிய சென்னை மெட்ரோ இரயில் நிறுவன அதிகாரிகள்,”புவியியல்‌ நிலை முதல்‌ சாலையின்‌ அகலம்‌ குறைவு வரை பல்வேறு பிரச்னைகள்‌ இருப்பதால்‌, மயிலாப்பூர்‌ மெட்ரோ ரயில்‌ நிலையம்‌ அமைப்பது மிகவும்‌ சவாலாக இருக்கிறது. மயிலாப்பூரில்‌ போதிய நிலம்‌ மற்றும்‌ சாலை அகலம்‌ இல்லாததால்‌, 3 நிலையங்களுடன்‌ கூடிய ஆழமான
ரயில்‌ நிலையங்கள்‌ கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுருப்பாதகவும் இன்னும் ஒரு சில ஆண்டுகளில்‌ மயிலாப்பூர்‌ மெட்ரோ ரயில்நிலையம்‌ திறக்கப்படும்‌ எனவும் கூறினர்.

மேலும் மயிலாப்பூரில் அமைக்கப்படும் மெட்ரோபானது நான்கு நிலையங்களை கொண்டிருக்கும் என்றூம் 114 அடி மற்றும்‌ 55 அடி ஆழத்தில்‌ 3 அடுக்கு அமைக்கப்படவுள்ளது என்றும் தெரிவித்தனர்.இதுதவிர, இந்த ரயில்‌ நிலையத்தில்‌ மாதவரத்தில்‌ இருந்து சிப்காட்‌ மற்றும்‌ பூந்தமல்லியில்‌ இருந்து கலங்கரைவிளக்கம்‌ வரை 2 பாதைகள்‌ சந்திக்கும் வகையில் வடிவமைக்கப்படும். பயணிகளுக்கு டிக்கெட்‌ வழங்குவதற்கான தளத்துடன்‌ இந்த ரயில் நிலையம்‌ அமையவுள்ளது என்று கூறினர்.

மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பதற்கான மண்‌ ஆய்வுக்கு பிறகு, மயிலாப்பூரில்‌ பாறைகளும்‌, பாறை மண்ணும்‌ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனால்‌, சுரங்கப்பாதை அமைக்கும்‌ பணிக்காக, அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளும்‌ பணி கடினமாக இருக்கும்‌ என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றனர்‌. மயிலாப்பூர்‌ மெட்ரோ ரயில்நிலையத்தில்‌ முதல்‌ தளத்தில்‌ தரையில்‌ இருந்து 55 அடியில்‌ உயரத்தில் மாதவரம்‌-சிப்காட்‌ செல்லும்‌ மேல்தளப்பாதை ரயில்களும்‌, 2-ஆம்‌ தளத்தில்‌ தரையில்‌ இருந்து 78 அடியில்‌ கலங்கரை விளக்கம்‌-பூந்தமல்லி செல்லும்‌ ரயில்களும்‌, 3-ஆம்‌ தளத்தில்‌ தரையில்‌ இருந்து 114 அடியில்‌ மாதவரம்‌- சிப்காட்‌ செல்லும்‌ கீழ்ப்பாதை ரயில்களும்‌ வந்து செல்லும்‌ வகையில்‌ அமைக்கப்படவுள்ளது என்று விளக்கினர்.

மேலும் படிக்க: பொதுமக்களுக்கு சூப்பர் அறிவிப்பு.. மதுரை - ராமேஸ்வரம் பயணிகள் ரயில் சேவை இன்று தொடக்கம்.!