Asianet News TamilAsianet News Tamil

அதிமுக பிரமுகரை கொலை செய்ய முயற்சி... இன்வெட்டரால் உயிர் தப்பிய அதிசயம்...!

மின் இணைப்பை துண்டித்துவிட்டு, அதிமுக பிரமுகரை கொலை செய்ய முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 7 பேரை, வலைவீசி தேடி வருகின்றனர். வீட்டில் இன்வெட்டர் பொருத்தப்பட்டதால், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

murder attempt aiadmk Personality
Author
Tamil Nadu, First Published Dec 31, 2018, 9:54 AM IST

மின் இணைப்பை துண்டித்துவிட்டு, அதிமுக பிரமுகரை கொலை செய்ய முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 7 பேரை, வலைவீசி தேடி வருகின்றனர். வீட்டில் இன்வெட்டர் பொருத்தப்பட்டதால், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

சென்னை திருவொற்றியூர்இந்திரா காந்தி குப்பத்தை சேர்ந்தவர் லாசர் (50). 40வது வார்டு அதிமுக ஜெ.பேரவை செயலாளர். 28 ஆண்டுகளாக புத்தாண்டு விழா லாசர் தலைமையில் கொண்டாடப்படுகிறது. இதில், அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள், சிறுவர்களுக்கான கலை நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம்.

 murder attempt aiadmk Personality

இதைதொடர்ந்து, இந்தாண்டு புத்தாண்டு விழா கொண்டாடுவதற்காக, அப்பகுதி மக்களிடம் லாசர் பணம் வசூல் செய்துள்ளார். இதற்கு, அப்பகுதியை சேர்ந்த சிலர், லாசர் தலைமையில் புத்தாண்டு விழா கொண்டாட கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி அவர், விழா ஏற்பாடுகளை செய்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுமார் 12 மணியளவில் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. ஆனால், லாசர் வீட்டில் இன்வெட்டர் பொருத்தப்பட்டுள்ளதால், மின்தடை இல்லை. அப்போது, அவா் தனது வீட்டின் வெளியே வந்தார்.

அப்போது அங்கு சிலர், கத்தியுடன் நின்றிருந்தனர். அதை பார்த்து அதிர்ச்சியடைந்த லாசர் அலறி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் ஓடி வந்தனா். அதை கண்டதும், மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர். இதுகுறித்து திருவொற்றியூர் போலீசில், லாசர் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சிதம்பரமுருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தார்.

 murder attempt aiadmk Personality

அதில் மர்மநபர்கள் சிலர், அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் செல்லும் டிரான்ஸ்பார்மரில் உள்ள மின் இணைப்பை துடித்தனர். பின்னர் அவர்கள், லாசர் வீட்டின் வெளியே கத்தியுடன் நின்றது பதிவாகி இருந்தது. சிசிடிவி கேமராவி பதிவாகி இருந்த உருவத்தை வைத்து போலீசார் விசாரித்தனர். அதே பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் (30), விஜய் (19), விச்சு (20), அருண் (22) ஆகியோர் என தெரிந்தது. அவர்களை, நேற்று மதியம் போலீசார் கைது விசாரித்தனர். murder attempt aiadmk Personality

விசாரணையில், இந்தாண்டு புத்தாண்டு விழா, லாசர் தலைமையில் நடப்பது எங்களுக்கு பிடிக்கவில்லை. அதனால், அவரை கொலை செய்ய 10 பேர் திட்டமிட்டோம். ஆனால், பொதுமக்கள் வந்ததும் தப்பிவிட்டோம். இதில், சிசிடிவி கேமரா காட்சியை வைத்து போலீசார் பிடித்துவிட்டனர் என அவர்கள் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனா். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனா். மேலும் தலைமறைவாக உள்ள 7 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios