Munirakkar was shot dead by the Madurai police inspector

மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனை சுட்டது முனிசேகர்தான் எனவும் கொள்ளையன் நாதுராமை பிடிக்க முனிசேகர் சுட்டபோது குறிதவறி பெரிய பாண்டியன் உயிரிழந்துள்ளார் எனவும் சென்னை போலீஸ் உறுதிபட தெரிவித்துள்ளது. 

சென்னை கொளத்தூரில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையனை பிடிக்க சென்ற போது பெரியபாண்டியன் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். 

பெரியபாண்டியை சுட்டது யார் என்பது குறித்து மர்மம் நீடித்துக்கொண்டே வருகிறது. ராஜஸ்தான் போலீசார் நடத்திய விசாரணையில் பெரியபாண்டியன் உடலில் இருந்த குண்டு உடன் சென்ற முனிசேகர் துப்பாக்கியில் இருந்தது தான் எனவும் முனிசேகர் தவறுதலாக சுட்டதால் தான் பெரியபாண்டி உயிரிழந்ததாகவும் ராஜஸ்தான் போலீஸ் தகவல் தெரிவித்திருந்தது. 

இதையடுத்து சில நாட்களுக்கு முன்னர் கொள்ளையன் நாதுராமின் கூட்டாளிகள் மற்றும் உறவினர்கள் சிலரை ராஜஸ்தான் போலீசார் கைது செய்தனர். 

இந்நிலையில் ராஜஸ்தான் போலீஸ் கூறியதை சென்னை போலீஸ் உறுதி செய்துள்ளது. அதாவது, மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனை சுட்டது முனிசேகர்தான் எனவும் கொள்ளையன் நாதுராமை பிடிக்க முனிசேகர் சுட்டபோது குறிதவறி பெரிய பாண்டியன் உயிரிழந்துள்ளார் எனவும் சென்னை போலீஸ் உறுதிபட தெரிவித்துள்ளது.