Municipal officers who besieged the Commissioner for not paying for two months What is horrible sir mumant ...

விருதுநகர்

விருதுநகரில் இரண்டு மாதங்களாக சம்பளம் கொடுக்காததால் அலுவலக ஊழியர்கள் ஆணையரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் நகராட்சியில் அலுவலக ஊழியர்களுக்கு இரண்டு மாதங்களாக ஊதியம் கொடுக்கவில்லை என்றும், ஊதியத்தை உடனே பட்டுவாடா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் அலுவலக ஊழியர்கள் நேற்று ஆணையர் சந்திரசேகரனை முற்றுகையிட்டு முறையிட்டனர்.

ஆணையர் சந்திரசேகரன், "நிதி பற்றாக்குறை காரணமாகவே சம்பள பட்டுவாடா தாமதம் ஆனது" என்று தெரிவித்தார்.

மேலும், "வரி வசூலை விரைவுபடுத்தி சம்பள பட்டுவாடா செய்ய நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்" என்று அலுவலர்களை கேட்டுக்கொண்டார்.

போராட்டம் நடத்தி சம்பளத்தை பெற்று விடலாம் என்று ஆவேசத்தோடு வந்த அலுவலர்களை, எல்லாரும் ஒன்றாக சேர்ந்து வரி வசூலை விரைவுபடுத்துவோம். அப்போதுதான் சம்பளம் கிடைக்கும் என்று ஆணையர் கொடுத்த விளக்கத்தை கேட்ட அலுவலர்கள் திகைத்து நின்றனர்.

பின்னர், இதனை ஏற்றுக் கொண்ட அலுவலர்கள் தங்களது முற்றுகை போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.